விழுப்புரத்தில் இடுகாட்டுக்கு செல்ல பாதை வேண்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகேயுள்ள சிறுவை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால், வயல்களின் வழியே சடலங்களை எடுத்து சென்று அடக்கம் செய்து வந்துள்ளனர்.
பொதுமக்கள் ஒன்றிணைந்து இடுகாட்டுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது, ஒரு சிலர் மட்டும் தங்களது நிலத்த தர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் துறையினர் தலைட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.