விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
விழுப்புரம், ஜக்காம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எம்.பி., ராஜேந்திரன் காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. பலத்த காயமடைந்த அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.