விழுப்புரம் மாவட்டம் பிள்ளை சாவடியில், தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்காத, தமிழ்நாடு அரசைக் கண்டித்து மீனவ குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொம்மையார்பாளையம், பெரிய முதலியார் சாவடி மற்றும் பிள்ளைச்சாவடி ஆகிய பகுதிகளில், கடல் அரிப்பு காரணமாக வீடுகள் சேதமடைகின்றன.
இதுகுறித்து முறையிட்டும், தூண்டில் வளைவுகள் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மீனவகுடும்பத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை சாலையில் வீசி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், சாலையின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அருண், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.