விழுப்புரம் மாவட்ட அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
உளுந்தூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர், விழுப்புரம் மாவட்டம் என்றைக்கும் அதிமுக கோட்டை என்பதை அனைத்து தொகுதியிலும் தான் சுற்று பயணம் மேற்கொண்ட போது, மக்கள் நிரூபித்து காட்டிய மாவட்டம் என்று கூறினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த முதல்வருக்கு பறை இசை, செண்டை மேளம், பம்பை உடுக்கை, நாதஸ்வரம் மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.