விழுப்புரத்தில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பூங்காவைக் காண, பொதுமக்கள் குழந்தைகளுடன் குவிந்தனர்.
விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்மூலம் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பேருந்து நிலையம் அருகே உள்ள சேதமடைந்த பூங்கா, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு, அம்மா பூந்தோட்டம், குளம், குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய வகையில் நவீனமயமாக்கப்பட்டது.
இதனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நிலையில், அம்மா பூந்தோட்டம் மற்றும் குளத்தினைக் காண, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் குவிந்தனர்.