கரடியை பார்த்தால் பயம் கொள்ளாத மனிதர்கள் கிடையாது. ஆனால் கரடியையே, கரடி கருப்ப சுவாமியாக ஒரு கிராமத்து மக்கள் வழிபடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காப்பாரப்பட்டியில் உள்ள காப்பார அய்யனார் கோவிலில்தான், கரடி கருப்ப சுவாமிக்கு தனி ஆலயம் உள்ளது. இந்த சாமிக்கு, திருவிழாவின் போது, கிராமத்து மக்கள் கரடி புரவியை நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு மழை வேண்டி புரவி எடுப்பு விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக சிங்கம்புணரியிலிருந்து, பிடிமண்ணால் செய்யப்பட்டிருந்த 2 குதிரை புரவிகள் 6 கரடி புரவிகள் மற்றும் கருப்பண்ண சுவாமி சிலை உள்பட 9 புரவிகள் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பாரப்பட்டி கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன.