ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்திய கிராம மக்கள்!

கொரோனா இரண்டாம் அலையில் தாக்கம் இதுவரை குறையாத நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரத்தில் அனுமதியின்றி கோயில் திருவிழாவை கிராம மக்கள் நடத்தியுள்ளனர். திருவிழாவையொட்டி கபடி மற்றும் கயிறிழுக்கும் போட்டிகளையும் அவர்கள் நடத்தினர்.

 

 

ஊரடங்கை மீறி எந்த வித பாதுகாப்பு விதிமுறைகளும் கடைபிடிக்கபடாமல் நடத்தப்பட்ட கோயில் திருவிழா குறித்து மாவட்டம் நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஊரடங்கில் நேரத்தில் புதுமாப்பிளை யானை மேல் அம்பாரி வைத்து அழைத்து வரப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. காசியாபுரம் பகுதியில் திருமண நிகழ்ச்சி முன்பாக மாப்பிள்ளை யானை மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் பாதுகாப்பான இடைவெளி கேள்விக்குறியானது.

Exit mobile version