நெல்லை அருகே ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை அடுத்துள்ள தாமரைச்செல்வி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இட்டேரி பஞ்சாயத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனிடையே, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க விட்டால் ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post