விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்த முதலமைச்சருக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரத்தினை முதல்வர் பழனிசாமி தொடங்கினார். தான் விபத்தில் முதல்வராகவில்லை எனவும் பொதுமக்கள் ஆதரவுடனும், 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதாக, ஸ்டாலினுக்கு பதிலளித்தார். அதிமுகவை விமர்சிக்கும் தகுதி திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் இல்லை என சாடிய முதலமைச்சர், திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றது ஒரு விபத்து என்று குறிப்பிட்டார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அவருடன் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Exit mobile version