விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நிறைவு பெற்றது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் களத்தில் உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மழை விட்டு விட்டு பெய்த போதும் அதை பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. வரும் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தது.

Exit mobile version