விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

வருகிற 21-ஆம் தேதி இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் 225 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் வருகிற 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதையொட்டி இரண்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Exit mobile version