கிரிக்கெட்டில் அசத்திய விக்ராந்த்… பாராட்டிய அஸ்வின்…

நடிகர் விக்ராந்த் நடித்த பக்ரீத் டீஸர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ராந்த் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். TNCA 4th division லீக் மேட்சில் கலந்து கொண்ட விக்ராந்த் 92 பந்துகளுக்கு 107 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். விக்ராந்த் பங்கேற்ற அணியான Vigneshwara CC இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் லீக்கில் தொடர் முடியும் என்ற நிலையில் விக்ராந்தின் இந்த செஞ்சுரி அணியை வெற்றி பெற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்தின் இந்த செஞ்சுரியை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் வெகுவாக பாராட்டி உள்ளார். உங்களது ஆட்டம் வளரும் இளைஞர்களுக்கு ஓர் ஊக்கமாக அமையும் என விக்ராந்திற்கு அஸ்வின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version