விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை இறங்கமட்டேன் என்று கூறி உத்தரப்பிரதேசத்தில் பாலத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தும் நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அதனை மீட்க இஸ்ரோ முயன்று வருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் நகரில் யமுனை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய
பாலத்தின், ராட்சத தூணில் தேசியக் கொடியுடன் ஏறி ஒருவர் போராட்டம் நடத்தினார். பல மணிநேரமாக பாலத்தின் தூணிலேயே நின்றிகொண்டிருந்த அவர், பின் சிறிய துண்டு சீட்டு ஒன்றை கீழே நின்ற பொதுமக்கள் மீது தூக்கி வீசினார். அதில் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை கீழே இறங்கமாட்டேன் என்றும் அது வரை சந்திரன் கடவுளை பிரார்த்தனை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் அந்த துண்டு சீட்டில் தனது பெயர் ரஜினிகாந்த் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் போராடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.