நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் சற்று முன்பு வெளியானது. அந்த டீசரில், இந்த திரைப்படம் அப்பட்டமான அரசியல் படம் என தெரிகிறது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த குடும்பத்தை சித்தரித்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது போல் தெரிகிறது.
வாக்களிப்பதற்காகவே வெளிநாட்டில் இருந்து வந்த கார்ப்பரேட் கிரிமினல் என விஜய் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. டீசரில் இடம் பெற்றுள்ள ஒரு வசனத்தில், உங்க ஊர் தலைவன தேடிப் பிடிங்க என்கிறார் விஜய்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடன் அவர் மீதான விமர்சனம், அவர் தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தான். தற்போது அரசியலுக்கு வர துடிக்கும் விஜய், ரஜினியை தாக்கி பேசுவது போன்று அந்த வசனம் உள்ளதாக கருதப்படுகிறது.
அரசியலுக்காக சில கட்சிகள் இனவாதம் பேசி வருகின்றன. அந்த ஆயுதத்தை விஜயும் கையில் எடுக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.