ரசிகர் வீட்டில் விஜய்யின் அம்மா சமையல்!..வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

விஜய்யை பொறுத்தவரையில் அவர் இந்தளவிற்கு முன்னேறி இருப்பதற்கு அவரது குடும்பம் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.அதே சமயம் விஜய் ரசிகர்களுக்கு விஜய் மீது மட்டுமல்லாது அவர் குடும்பத்தினர் மீதும் அன்பு செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் பெற்றோர் எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து விஜய்யின் ரசிகர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். விஜய்யின் அம்மா சோபா, அவர்களின் வீட்டு  சமையலறைக்குச் சென்று சமைத்து  உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version