20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வெளியிட்ட விஜய்யின் பிறந்தநாள் Common DP!!!

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் Common-dpயை 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கான Common DP வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், ஆண்ட்ரியா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மோகன் ராஜா, ரத்னகுமார், அருண்ராஜா காமராஜ், அஜய் ஞானமுத்து, டேனியல் பாலாஜி என 21 பிரபலங்கள் இந்த Common DP-யை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் ஆன்லைனில் ட்ரெண்ட் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Exit mobile version