ஆயிரத்து 884 MBBS மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்படவுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில், குழந்தைகளுக்கான இருதய நோய் பரிசோதனை முகாமினை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்தி 899 குழந்தைகளுக்கு, 200 கோடி மதிப்பீட்டில் எவ்வித கட்டணமும் இல்லாமல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியவிலேயே, தமிழகத்தில் மட்டும் தான் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் ஆயிரத்து 884 MBBS மருத்துவர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.