அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்க அரசு திட்டம் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கும் முனைப்பில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறையின் புதிய அலுவலக கட்டட பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பூமி பூஜை செய்து கட்டட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கும் முனைப்பில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version