தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் 25 ஆண்டு தொடர் சேவை மற்றும் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் இதுவரை  கொரோனா வைரஸ் பாதிப்பு   இல்லை என்றார். விமான நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டுமல்லாமல் உலக சுகாதார மையம் எந்த நாடுகளை கொரானோ பாதிப்பு இருப்பதாக அறிவிக்கிறதோ அந்த நாட்டினரையும் பரிசோதிக்கிறோம் என்றார்.

Exit mobile version