புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் இழந்த இயற்கையை மீட்டெடுக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் இழந்த இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் மூன்று மடங்கு மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முதல் கட்டமாக 20 ஆயிரம் மரங்கள் நடும் பணியை தொடங்கியுள்ளதாகவும், இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என அவர் கூறினார்.