அரசியல் பயணத்தை தொடங்குகிறாரா விஜய் ?

நடிகர் விஜயின் சர்கார் படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் கலாநிதி மாறன் பேசியதும், விஜய் பேசியதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் விஜய் தனது அரசியல் களத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதலாவது டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிடுகிறார். ஏறத்தாழ 90 கோடி ரூபாய் அளவுக்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version