விஜய்சேதுபதியும்… பிஎம்டபிள்யூ பைக்கும்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் தற்போது பைக் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ் திரையுலக பிரபலங்களில் சிலர் எப்போதுமே ஆடம்பர பைக்,கார் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய்சேதுபதியும் இணைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவர் புதிய பிஎம்டபிள்யூ G310GS ரக பைக் வாங்கியதாக தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது . அந்த புகைப்படம் புதிய பிஎம்டபிள்யூ G310GS ரக பைக் மீது அவர் அமர்ந்திருப்பது போன்று உள்ளது.

இப்புகைப்படம் மூலம்  வித்தியாசமான பைக் வாங்குவதில்  விஜய்சேதுபதிக்குள்ள ஆர்வத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Exit mobile version