விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையா ரகசியமாக வெளியேறவில்லை என்றும் ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே சென்றார் என்றும் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் பதிலளித்தார். விஜய் மல்லையா ஜெனீவா கூட்டத்திற்காக இந்தியாவை விட்டு சென்றார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் பதலளித்தார். மேலும், கூட்டத்திற்கு செல்வதாக இருந்தால் 300 பைகளுடன் சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே, விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Exit mobile version