விஜய் மல்லையா சொத்துக்களை பறிமுதல் செய்ய தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ரூபாய் 9 ஆயிரம் கோடி பண மோசடி செய்துள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்ய தடை கோரிய வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அவற்றை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.இந்நிலையில் இவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், மல்லையாவை இந்தியா கொண்டு வரவும் அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனையடுத்து தனது சொத்துக்களை பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும் என விஜய் மல்லையா மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் எஸ்.ஜே. கதவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.மேலும் விஜய் மல்லையாவிடம் கடனை வசூலித்து தரும்படியும், இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Exit mobile version