விஜய் மல்லையா விவகாரம் : பிரத்யேக நீதிபதி நியமனத்திற்கு பின்பு வழக்கின் முடிவு வெளியாகும் தொழிலதிபதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கிற்கான பிரத்யேக நீதிபதி நியமிக்கப்பட்ட பின்பு வழக்கின் முடிவு தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடி செய்ததாக மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆவணங்களில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித்தும் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.