#டைம்சொல்லுடாஅர்சு – சமூக வலைத்தளங்களை ட்ரெண்டாகும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் “பிகில்”. இயக்குநர் அட்லியுடம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பிகில் திரைப்படம் குறித்து அப்டேட்டுகள் அதன் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியால் அறிவிக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்றைய தினம் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே என்ற பாடல் வெளியாகும் என படக்குழு தரப்பில் சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.இதுகுறித்த போஸ்டரும் வெளியானது. ஆனால் பாடல் வெளியாகும் நேரம் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

இதனை குறிப்பிட்டு ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். இது படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியை குறிப்பதாக உள்ளது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version