"எடப்பாடியில் முதலமைச்சருக்கு ஆதரவு திரட்டிய விஜய் ரசிகர்கள்"

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி வேட்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

எடப்பாடி நகர, ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், பொறுப்பாளர்கள் ஆதிகேசவன், சக்திவேல் ஆகியோர் தலைமையில், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து களப்பணியாற்ற முன்வந்தனர்.

அவர்களை, அதிமுக நகர செயலாளர் முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், ஒன்றிய கழக செயலாளர் மாதேஷ், எடப்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்லத்துரை ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Exit mobile version