ரூ.15 கோடியில் வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா ….!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய வீடு வாங்கியது குறித்து இணையத்தில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரைப்படத்துறைக்கு பெல்லி சுப்ளூ படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா அறிமுகமானார். கடந்த 2017- ல் சந்தீப் வங்கா இயக்கத்தில் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தேவரகொண்டா தென்னிந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது. இந்நிலையில்

விஜய் தேவரகொண்டா ஹைதரபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் மிகப்பெரிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பின் சுமார் 15 கோடி என்று கூறப்படுகிறது. இதனை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் அம்மாவின் மகிழ்ச்சி,அப்பாவின் பெருமை,எங்கள் புதிய வீடு! என பதிவிட்டுள்ளார். மேலும் இவர், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மற்றும் ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version