World Famous Lover-ஆக மாறிய விஜய் தேவரக்கொண்டா…

விஜய் தேவரக்கொண்டா நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு World Famous Lover என பெயர் வைத்துள்ளனர்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் தேவரக்கொண்டா தனது முதல் படத்திலேயே அசத்தலாக நடித்திருப்பார்.அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் முதல் படத்தை போல மாபெரும் வெற்றிப்பெறவில்லை.ஆனால் இவருக்கான ரசிகர் கூட்டத்திற்கு அளவே இல்லை.இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் பெயரை விஜய் தேவரக்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தினை ரந்தி மாதவ் இயக்கவுள்ளார்.

World Famous Lover படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரசா, இஸபெல்லா என நான்கு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்,பின்பு இரண்டாவதாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருப்பதால் விஜய் தேவரக்கொண்டா ஒரு காதல் மன்னனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் first look poster செப்டம்பர் 20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

Exit mobile version