விஜய் தேவரகொண்டா மீது காதலா..? ராஷ்மிகா உடைத்த உண்மை

விஜய் தேவரகொண்டாவை  காதலிப்பதாக  எழுந்த வதந்திக்கு  நடிகை ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய 2 படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடி என்று விமர்சனம் பெற்றார்கள்…

இதனை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசு சமூகவலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இருவர்களிடம் திருமணம் எப்போது? என்று கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு நடிகை ராஷ்மிகா , தாங்கள் படத்திற்காக அவ்வாறு நடிக்கிறோம் என்றும் .தொழிலையும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றுப்படுத்தி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இருவரும் இடையே காதல் என்று ஒன்றும் இல்லை இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என ராஷ்மிகா கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கிராமத்து பெண்ணாக முற்றிலும் மாறுப்பட்ட கதைகளத்திலும் சரித்திர கதை படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version