9 நகரங்களின் மக்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்து அசத்திய “அர்ஜூன் ரெட்டி” ஹீரோ

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு இன்று பிறந்தநாள்.

2011ல் “நுவ்விலா” படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான விஜய்க்கு 2017ல் வெளியான “அர்ஜுன் ரெட்டி” மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும், தமிழில் அவர் அறிமுகமான நோட்டா படமும் அவருக்கு மேலும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தது.

இந்நிலையில் இன்று அவர் இன்று 30வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவரும் தனது பிறந்தநாளை முன்னிட்டு 9 நகரங்களிலுள்ள ரசிகர்களுக்கு லாரிகள் மூலமாக ஐஸ்கிரீம் ட்ரீட் வழங்கி கொண்டாடி உள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஹைதரபாத்தில் நடிகர் விஜய்யே நேரில் இதனை மக்களுக்கு வழங்கினார்.

கடந்த வருடம் தனது பிறந்தநாளின் போது சுமார் 5000 ஐஸ்கிரீம்களை ஹைதரபாத்தின் நான்கு இடங்களில் வழங்கினார். அது வெற்றிகரமாக நடைபெறவே இந்த முறை 9 நகரங்கள் வரை விரிவடைந்துள்ளது.

இந்த ட்ரீட் குறித்து விஜய் தனது பேஸ்புக் பக்கத்தில், “நீங்கள் என் மீது கொண்ட அன்பின் காரணமாக இந்த நாளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். எனக்கு ஐஸ்கிரீம் என்றால் பிடிக்கும். அதைவிட பிடித்தத் உங்களுடைய சந்தோசமான முகங்களை பார்க்கும் போது தான் என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த செயல் சினிமா உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version