விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த வட சென்னை ஹீரோயின்

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துவிட்டார் விஜய் தேவரகொண்டா.

பெயரிடப்படாத இவரது அடுத்த தெலுங்கு படத்தில் வட சென்னை ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஸ் நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ராக்ஷி கண்ணா இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனையொட்டி, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஸ்.

விஜய் தேவரகொண்டாவை பொறுத்தவரை புதிய தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

Exit mobile version