விஜய், அஜித் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? – பதிலளித்த ஷாரூக்கான்

பாலிவுட்டின் தளபதியாக வலம் வரும் நடிகர் ஷாரூக்கான் ட்விட்டரில் இன்றைய தினம் #AskSRK என்ற பெயரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இவர்களை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுமாறு ரசிகர்கள் கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், அஜித் தனது “நண்பர்” எனவும், விஜய் “வியக்கத்தக்கவர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கும் எண்ணம் உள்ளதாகவும், நடிகர் தனுஷ் “நான் நேசிக்கும் நபர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பற்றிய ஷாரூக்கானின் பதிலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version