தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா கடந்த சில வருடங்களாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிகில், தர்பார், சைரா நரசிம்ம ரெட்டி என கமர்ஷியல் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் கதையின் நாயகியாக நடிக்க முடிவெடுத்துள்ளார்.
சித்தார்த் நடித்த “அவள்” படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரின் அறம், கோலமாவு கோகிலா படங்களை தவிர்த்து மற்ற படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. இதனால் நயன்தாராவை மற்ற தயாரிப்பாளர்கள் கதையின் நாயகியாக வைத்து படம் தயாரிக்க தயங்கும் வேளையில், விக்னேஷ் சிவன் அவருக்காக தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.