ஈரானின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க, கனடா நாடுகளின் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
உக்ரைன் விமானம் ஒன்று தெஹ்ரானில் விழுந்து நொறுங்கியதில் 176 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலிலேயே உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக, அமெரிக்கா, கனடா நாட்டு அதிகாரிகள் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். உக்ரைன் விமானத்தை ஏவுகணை ஒன்று தாக்குவது போன்ற வீடியோவையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.