விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
அருப்புக்கோட்டையில் திமுக எம்.பி. கனிமொழியின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர். பிரசாரம் முடிந்த பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கினர்.
தலா 100 ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் திமுக வேட்பாளர்கள் பணம் வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்து கூட்டம் கூட்டிய திமுக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
Discussion about this post