மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் துணை முதல்வர் பங்கேற்ப்பு

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஜூன் 6 ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு கோயில்களில் ராஜகோபுரங்கள் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் திருப்பணிகள் நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் யாக சாலை பூஜை, ஆறாம் கால பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, மருந்தீஸ்வரர், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கொடியசைக்க, புனித நீர் ஊற்றப்பட்டது.

முன்னதாக குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்தீஸ்வரை வழிபட்ட  துணை முதலமைச்சர், குடமுழுக்கு விழாவை கண்டுகளித்தார். குடமுழுக்கு விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் பாதுகாப்புக்காக 700க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோயில் பகுதிகளில் 61 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முடமுழுக்கை பக்தர்கள் கண்டுகளிக்க 2 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் வசதிக்காக வாகனங்கள் நிறுத்தும் வசதியும், மாநகராட்சி சார்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version