"அரசு தரப்பில் மிரட்டல் வரலாம்" – வெங்கடாசலம் உறவினர்கள் அச்சம்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் குறித்த எந்த தகவலை வெளியே சொன்னாலும், அரசு தரப்பில் மிரட்டல் வருமோ என்ற அச்சம் இருப்பதாக அவரது உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திமுக அரசு பொறுப்பேற்றதை அடுத்து பல துறைகளில் நேர்மையாக பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அந்த வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பிலிருந்து வெங்கடாசலத்தை ராஜினாமா செய்ய வைப்பதற்கு திமுக அரசு தரப்பில் இருந்து குடைச்சல் கொடுக்கப்பட்டதாக குற்றசாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் வெங்கடாசலத்தை பதவி நீக்கம் செய்த திமுக அரசு அதற்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை. இதற்கிடையே அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து சம்மன் அனுப்பாமல் விசாரணைக்கு ஆஜராகுமாறு வெங்கடாசலத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறை தொடர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்கடாசலம் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

வெங்கடாசலம் தற்கொலை குறித்து மேற்கொண்டு எதுவும் பேச தயாராக இல்லை என்றும், அவ்வாறு தெரிவித்தால் காவல்துறையினாலோ, லஞ்ச ஒழிப்புத் துறையினாலோ மிரட்டல் வருமோ என்ற அச்சம் இருப்பதாகவும் அவரது உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version