இது நடந்துவிட்டது: அடுத்து பட கூட்டணி பற்றி அறிவித்த வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது.பின்பு சரோஜா, கோவா, ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

பின்பு,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை வைத்து 2011ம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார் . இன்றுவரை தல ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் மங்காத்தா படமும் இடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பாகத்தைப் போல இந்த படம் வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

தற்போது காஜல் அகர்வாலை வைத்து பிஸியாக வெப்சீரிஸ் இயக்கிக் கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு,தற்போது ராகவா லாரன்ஸுடன் தான் இருக்கும் புகைப்படத்தினை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘god is kind ‘நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் .அதனால் தான் இது நடந்தது. ராகவா சகோதரர்களுக்கு நன்றி. விரைவில் தகவல்கள் அறிவிக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வெங்கட்பிரபு , தனது அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைய உள்ளார் என தெரியவந்துள்ளது.

 

Exit mobile version