இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையநாயுடு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். முதல் உலகப்போர் முடிவடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதில் வெங்கைய நாயுடு பங்கேற்க உள்ளார். அக்கால கட்டத்தில் இந்தியா சார்பில் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். இந்தியா மற்றும் பாரிஸ் இடையே அந்நாட்டு அமைதி குழுவுடன் நடைபெறும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையிலும் வெங்கையா நாயுடு பங்கேற்க உள்ளார்.
இதில் பரஸ்பர ஒத்துழைப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு,சுற்றுச்சூழல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.