பண்டைய காலங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லை – குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

பண்டைய காலங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள கங்கை, யமுனா, காவிரி போன்ற நதிகளுக்கு பெண்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன தெரிவித்தார்.

புராணங்களில் பார்க்கும்போது கல்விக்கு சரஸ்வதியும், வீரத்திற்கு பார்வதியும் கடவுள்களாக இருப்பதாக கூறிய வெங்கையா நாயுடு, தற்போது தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகிப்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார். மேலும் பிறந்த தேசத்தை தாய்நாடு என்று தான் அழைப்பதாகவும் தந்தை நாடு என அழைப்பது இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.

 

 

 

 

Exit mobile version