அமெரிக்காவுடனான தூதரக உறவை துண்டித்த வெனிசுலா

உள்நாட்டு குழப்பத்தை அமெரிக்கா ஏற்படுத்துவதாக கூறி அந்நாட்டுடனான தூதரக உறவை வெனிசுலா துண்டித்திருப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வென்று அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். இதனிடையே தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், மதுரோவின் வெற்றி செல்லாது என தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ, தன்னை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்தியிருப்பதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெனிசுலாவில் குழப்பம் விளைவிப்பதாக கூறி அமெரிக்கா உடனான தூதரக உறவை வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ முறித்துக் கொண்டுள்ளார். இதனிடையே ஜூவான் குவாய்டோவை வெனிசுலா அதிபராக அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜெண்டினா, பெரு, சிலி ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால் ரஷ்யா, துருக்கி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மதுரோ தான் வெனிசுலா அதிபர் என அறிவித்துள்ளன.

Exit mobile version