நிரந்தர வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் வேலுமணி

கஜா புயல் நிவாரணப்பணிகளில் எந்த கிராமங்களும் விடுபடாத அளவிற்கு நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தின் வண்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்த பின் செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் சாலை உள்ளிட்ட வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

துப்புரவுப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்றும் அமைச்சர் கூறினார். நிவாரணப்பணிகளில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி உதயகுமார், ஓ.எஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version