வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக,திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இன்று வேட்புமனு பரிசீலனை தொடங்கிய நிலையில், 11 கோடிக்கும் அதிகமான பணம் சமீபத்தில் கைப்பற்றப்பட்டதால், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version