வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து

திமுக பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து அவருடைய வீடு, கல்லூரி, பினாமி வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள அதே வேளையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளில், வரும் 18 தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்குபதிவை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

Exit mobile version