வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் பழனிசாமி, நாளை மறுநாள் துவக்குகிறார். வரும் 27ந் தேதி மாலை வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் பிரசாரத்தை துவக்குகிறார். மறுநாள் 28ஆம் தேதி கீழ்வைத்தியணான் குப்பம் மற்றும் குடியாத்தத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார். ஆகஸ்ட் 2 ந் தேதி அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதிமுக கூட்டணி சார்பில், வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ஏற்கனவே அமைச்சர்களும், கூட்டணிக் கட்சியினரும் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.