வாகனங்களின் முகப்பு விளக்குகளில் 2 வாரங்களுக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்

மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் 2 வாரங்களுக்குள் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் சிலர் இருப்பதால் விபத்துக்கள் நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சுந்தர் தலைமையிலான அமர்வு 2 வாரங்களுக்குள் அனைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்கு ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Exit mobile version