கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் ஆவணமின்றி கொண்டு சென்ற 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது, இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் பண பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பறக்கும் படைகள் அமைத்தும், நிலையான நிற்கும் படைகள் அமைத்தும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
பணத்தை பொறுத்தவரை 50 ஆயிரத்திற்கு மேல் வாகனங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆதாரம் வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.