கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கனிகள் வரத்து அதிக அளவுக்கு இருப்பதால் விலை குறைந்து காணப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் காய்கனிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் வரத்து குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு காய் கனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு நாளைக்கு 350 முதல் 380 லாரிகள் வரை வரத்து இருக்கிறது என்பதால் சில நாட்களுக்கு பிறகு 20 சதவீதம் வரை வரத்து குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.