ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறி விற்பனை அதிகரிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாவூர்ச்சத்திரம் தினசரி சந்தையில் காய்கறி வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கேரளாவில் ஓணம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தென்காசி அருகே உள்ள பாவூர் சத்திரம், நயினார்குளம் சந்தையில் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. நெல்லை மாவட்ட உள்ளூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள் மட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படும் காய்கறிகளும் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பண்டிகை காலம் என்பதால், நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version